திருமணம் செய்ய மறுத்த மாணவிக்கு உணவில் விஷம் கலந்த பெற்றோர்: தருமபுரியில் அதிர்ச்சி

திருமணம் செய்ய மறுத்த மாணவிக்கு உணவில் விஷம் கலந்த பெற்றோர்: தருமபுரியில் அதிர்ச்சி
Updated on
1 min read

உரிய வயது வருவதற்கு முன்னரே 16 வயதில் சட்ட விரோத திருமணம் செய்து வைக்கும் பெற்றோரின் முயற்சிக்கு மறுப்பு தெரிவித்த சிறுமிக்கு பெற்றோரே உணவில் விஷம் வைத்ததாக எழுந்துள்ள புகார் தருமபுரியில் பரபரப்பாகியுள்ளது.

தருமபுரி அருகே திருமணத்துக்கு உடன்படாத பள்ளி மாணவிக்கு விஷம் கலந்த உணவு கொடுத்ததாக பெற்றோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

அரசுப்பள்ளியில் படித்துவரும் 16 வயது மாணவிக்கு அவரது பெற்றோர் திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர், அதற்கு மாணவி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆத்திரம் அடைந்த பெற்றோர் மதிய உணவில் விஷம் கலந்த உணவை கொடுத்ததாக பகீர் புகார் எழுந்தது.

இதனை கண்டுபிடித்துவிட்ட சிறுமி மகேந்திர மங்கலம் காவல்நிலையத்துக்குச் சென்று தைரியமாக பெற்றோர் மீது புகார் அளித்தார்.

விசாரணையில் உணவில் விஷம் கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல்துறையினர் கைது செய்ததாகத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in