நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா?- பியூஷ் கோயல் பதில்

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா?- பியூஷ் கோயல் பதில்
Updated on
1 min read

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சரான பியூஷ் கோயல், தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. அடுத்த ஆண்டில் இருந்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படுவதை உறுதி செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது சாத்தியமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கோயல், ''நீட் விவகாரம் குறித்து எனக்கு முழுமையாகத் தெரியாது. நுழைவுத் தேர்வு தொடர்பான உரையாடல்கள் சுகாதாரத்துறையுடன் தொடர்புடையவை. விரைவில் நாங்களும் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளோம். நீட் தேர்வு தொடர்பான அதிமுகவின் கோரிக்கையை நிச்சயம் எடுத்துக்கொள்வோம். கவனத்துடன் அவை பரிசீலிக்கப்படும். அதில் ஏதாவது நல்ல விஷயங்கள் இருந்தாலும், திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வோம்.

திமுகவும் நீட் தேர்வு குறித்து தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அதிமுகவின் தேர்தல் கோரிக்கையை முழு கவனத்துடன் கருத்தில் கொண்டு, பரிசீலனை செய்வோம்'' என்றார் கோயல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in