அபிநந்தன் இந்தியா திரும்ப அனைத்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

அபிநந்தன் இந்தியா திரும்ப அனைத்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
Updated on: 
1 min read

அபிநந்தன்  பாதுகாப்பாக இந்தியா திரும்ப அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும்  மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் நேற்று (பிப் 27) தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இன்று காலை, பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டது.

இதுகுறித்து விவரித்த வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், இந்திய விமானப்படை விமானி பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கியதை உறுதி செய்தார்.

இதனைத் தொடர்ந்து அபினந்தனை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து திமுக தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ,”  எனது எண்ணமெல்லாம் அபிநந்தனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருக்கிறது.  இந்திய விமானப்படை விமானி அபினந்தன் பாதுகாப்பாக இந்தியா திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in