கெடுவன், கேடு நினைப்பான் என்ற பழமொழிக்கேற்ப எதிரிகள் கெட்டுப்போவார்கள்: அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

கெடுவன், கேடு நினைப்பான் என்ற பழமொழிக்கேற்ப எதிரிகள் கெட்டுப்போவார்கள்: அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
Updated on
1 min read

எடுபிடி, துதிபாடுவது, அடிமை சாசனம் என்பது அதிமுகவின் அகராதியிலேயே கிடையாது. கெடுவன், கேடு நினைப்பான் என்ற பழமொழிக்கேற்ப எதிரிகள் கெட்டுப்போவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய போது, “சென்னை தலைமை செயலகத்தில் துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக கூறுவது ஆதாரமற்றது அதிமுக எந்த சூழ்நிலையிலும் தனித்தன்மையை இழக்காது.

எடுபிடி, துதிபாடுவது, அடிமை சாசனம் என்பது அதிமுகவின் அகராதியிலேயே கிடையாது. கெடுவன், கேடு நினைப்பான் என்ற பழமொழிக்கேற்ப எதிரிகள் கெட்டுப்போவார்கள்.

காலை எழுந்தவுடன் ஆட்சிக்கு எதிராக என்ன சூழ்ச்சி செய்யலாம் என்றே நினைக்கிறார்கள். கட்சிக்குள் பிளவு ஏற்ப்படுத்த ஸ்டாலின், தினகரன் சேர்ந்து செய்யும் சதிதான் இது.

மம்தா கண்ணில் சுண்ணாம்பை வைத்து விட்டு ராகுலுக்கு வெண்ணெயை வைக்கிறார் ஸ்டாலின். எங்களைப்போன்று நீந்த தெரிந்தவர்களுக்கு ஆழம் பற்றி கவலையில்லை. நீந்தத்தெரியாத  ஸ்டாலினுக்குத்தான் கவலை. ஸ்டாலினுக்கு அரசியல் தெரியவில்லை. எப்படி கட்சியை வழி நடத்துவது என்று தெரியாமல் நடத்திக்கொண்டிருக்கிறார்” என்று சாடினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in