SIR | தென்காசி மாவட்டத்தில் 1.51 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

SIR | தென்காசி மாவட்டத்தில் 1.51 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!
Updated on
1 min read

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 1,51,902 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டார். அப்போது, ஆட்சியர் கூறியது:

தென்காசி மாவட்டத்தில் 27.10.2025 அன்று மொத்த 13,75,091 வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றிந்தனர். சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் வாயிலாக, இருப்பிடத்தில் வசிக்காதவர்கள், இதர வகையினர் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்கள் என 71,184 பேர், இறந்த வாக்காளர்கள் 70,139 பேர் மற்றும் இரட்டைப் பதிவுகள் 10,579 என மொத்தம் 1,51,902 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 12,25,797 வாக்காளர்கள் (2608 படைப்பணி வாக்காளர்கள் உட்பட) இடம்பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 6,01,787, பெண்கள் 6,23,852, மூன்றாம் பாலினத்தினர் 158 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கவனமாக சரிபார்க்க வேண்டும். வாக்காளர்களின் கோரிக்கைகள் மற்றும் முறையீடுகளை வாக்காளர் பதிவு அலுவலரிடம் தாக்கல் செய்யலாம். அதன்பிறகும் மேல்முறையீடு இருப்பின் மாவட்ட தேர்தல் அலுவலரிடமும், அதன்பிறகும் மேல்முறையீடு ஏதும் இருப்பின் தலைமை தேர்தல் அலுவலரிடமும் மேல்முறையீடு அளிக்கலாம்.

பெயர் விடுபட்டிருந்தால் புதிய சேர்க்கைக்கான கோரிக்கை, ஏற்கெனவே உள்ள பதிவுகளில் திருத்தக் கோரிக்கை, தகுதியற்ற பதிவுகள் இருப்பின் எதிர்ப்பு மனு போன்றவற்றை 19.12.2025 முதல் 18.1.2026 வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில், உதவி வாக்காளர் பதிவு அலுவலகத்தில் நேரடியாகவோ, அல்லது ECI NET APP, Voter Helpline App ஆகிய செயலிகள் மூலமாகவும் மற்றும் National Voters Service Portal என்ற இணையதளம் மூலமாகவும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

கோரிக்கைகள் மற்றும் முறையீடுகள் காலத்தில் சிறப்பு முகாம்கள், உதவி மையங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவை தொடர்ந்து நடத்தப்படும். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

SIR | தென்காசி மாவட்டத்தில் 1.51 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!
SIR | நெல்லை மாவட்டத்தில் 2.14 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in