SIR | நெல்லை மாவட்டத்தில் 2.14 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

SIR | நெல்லை மாவட்டத்தில் 2.14 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 2.14 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்களார் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஆர்.சுகுமார் வெளியிட்டார். பின்னர், அவர் கூறியது:

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி நிலவரப்படி, 6,91,026 ஆண்கள், 7,27,130 பெண்கள், 169 மூன்றாம் பாலினத்தவர் என்று மொத்தம் 14,18,325 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இவர்களுக்கு, அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டறிய இயலாதவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டைப்பதிவு கொண்டவர்களின் பெயர்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை. திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் 42,119 (13.77%), அம்பாசமுத்திரம் தொகுதியில் 42,501 (16.31%), பாளையங்கோட்டை தொகுதியில் 36,057 (12.89%), நாங்குநேரி தொகுதியில் 54,260 (18.18%), ராதாபுரம் தொகுதியில் 40,020 (14.62%) என மொத்தம் 2,14,957 (15.16%) வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பின் வாக்காளர்கள் தொகுதி வாரியாக:

திருநெல்வேலி: ஆண்- 1,27,950, பெண் - 1,35,655, மூன்றாம் பாலினத்தவர் - 80, மொத்தம் - 2,63,685

அம்பாசமுத்திரம்: ஆண் - 1,05,885, பெண்- 1,12,111, மூன்றாம் பாலினத்தவர் - 14, மொத்தம் - 2,18,010

பாளையங்கோட்டை: ஆண் - 1,18,679, பெண் - 1,25,066 மூன்றாம் பாலினத்தவர் - 17, மொத்தம்- 2,43,762

நாங்குநேரி: ஆண் - 1,20,613, பெண் - 1,23,590, மூன்றாம் பாலினத்தவர் - 13, மொத்தம் 2,44,216

ராதாபுரம்: ஆண்- 1,15,503, பெண் - 1,18,172, மூன்றாம் பாலினத்தவர்- 20, மொத்தம்- 2,33,695.

மொத்தம் ஆண்கள் 5,88,630, பெண்கள் - 6,14,594, மூன்றாம் பாலினத்தவர்- 144, மொத்தம்- 12,03,368.

SIR | நெல்லை மாவட்டத்தில் 2.14 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!
SIR | கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 84,329 வாக்காளர்கள் நீக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in