ஜெ. இல்லாத நிலையில் இடைத்தேர்தல் நடக்க உள்ளதால் தீவிரமாக உழைத்து வெற்றி பெறவேண்டும்: அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்

ஜெ. இல்லாத நிலையில் இடைத்தேர்தல் நடக்க உள்ளதால் தீவிரமாக உழைத்து வெற்றி பெறவேண்டும்: அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்
Updated on
1 min read

ஜெயலலிதா இல்லாத நிலையில் இடைத்தேர்தலை சந்திப்பதால், நிர்வாகிகள், மாவட்ட செய லாளர்கள் இணைந்து பணியாற்றி, 20 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் கே.பழனிசாமி அறிவுறுத் தியுள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள20 தொகுதிகளுக்கு எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் தேதிஅறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நடந்தது. அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் கே.பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் எம்பி., மற்றும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

‘ஜெயலலிதா இல்லாத நிலையில் இடைத்தேர்தலை சந்திப்பதால், நிர்வாகிகள், மாவட்டசெயலாளர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். வெற்றி பெறுவதற்கான வழியைக் கண்ட றிந்து அதற்கேற்ப தீவிரமாக உழைக்க வேண்டும். அனைத்துதொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்’ என்று இக்கூட்டத்தில் முதல்வர் கே.பழனிசாமி, வலியு றுத்தியதாக நிர்வாகிகள் கூறினர்.

5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், நாடாளு மன்றத் தேர்தலில் கவனமாக பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

கூட்டத்துக்குப் பிறகு, வட சென்னை வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டம் சார்பில், மாவட்ட செயலாளர் ராஜேஷ் ஏற்பாட்டின் பேரில், பயனாளிகளுக்கு 14 ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. இந்த ஆட்டோக்கள் பெரம்பூர்

இடைத்தேர்தலில் பிரச்சாரத்துக் காக பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், செய்தி யாளர்களிடம் அமைச்சர் டி.ஜெயக் குமார் கூறியதாவது:

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அந்த தேர்த லுடனோ, அதற்கு முன்னதாகவோ இடைத்தேர்தல் நடக்கலாம். எப்படி வந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளை அழைத்து தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்தப்படும் தேதி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

பலவீனமாக இருப்பவர்கள் தான் கூட்டணி சேர்ப்பார்கள். நாங்கள் வலிமையாக இருப்பதால் தேவையில்லை. தேர்தல் நேரத்தில் எங்களை தேடி வருபவர்களை சேர்த்துக் கொள்வோம்.

5 மாநில தேர்தல், மக்களின் தீர்ப்பை காட்டுகிறது. மக்கள் மனநிலை எப்போதும் ஒரேமாதிரி இருக்காது. எனவே, இந்த முடிவுகளை வைத்து நாடாளுமன்ற தேர்தலை கணிக்க முடியாது.

அதிமுக - அமமுக இணைப்பு என்பது ஒருபோதும் நடக்காது. அது திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி. நாங்கள் இதை மறுத்துவிட்டோம் டிடிவி தினகரன், திமுகவுடன் நெருக்கமாக இருக்கிறார். அதற்கு முன்னோட்டமாக செந்தில்பாலாஜி திமுக செல்லப்போகிறார். நாளை தினகரனேகூட திமுகவுக்கு போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in