

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் எண்ணெய் கசிவு குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதில், ஈராக்கில் இருந்து கச்சா எண்ணெய் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்காக கொண்டு வரப்பட்டதாக தகவல் இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து, சிபிசிஎல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கும், காமராஜ் துறை முகத்துக்கும் இடையே எந்தக் குழாய் இணைப்பும் இல்லை. சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்குத் தேவையான கச்சா எண்ணெய் சென்னை துறைமுகத்தில் இருந்து மட்டுமே குழாய் இணைப்பு மூலம் கொண்டு வரப்படுகிறது.
எனவே, எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவுக் கும், சென்னை எண்ணெய் சுத்தி கரிப்பு ஆலைக்கும் எந்தத் தொடர் பும் கிடையாது என தெரிவிக் கப்பட்டுள்ளது.