

புயல் நிவாரணப் பணிகளுக்காக ரூ.1,000 கோடியை உடனடியாக விடுவித்து முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முகாமில் தங்கியுள்ளவர்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 ஆயிரமும் தென்னை மரங்களுக்கு இழப்பீடு மற்றும் மறுசாகுபடிக்காகவும் ஹெக்டேருக்கு ரூ.2 லட்சத்து 64,600-மும் முழுமையாக பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கஜா’ புயலால் ஏற்பட்ட சேதங் கள், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்து முதல்வர் கே.பழனி சாமி தலைமையில் சென்னை தலை மைச் செயலகத்தில் நேற்று ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம், அமைச்சர்கள் சி.வி.சண்முகம். ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின், முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நிவாரண முகாம்களில் தங்கி யுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண் ணெண்ணெய் வழங்கப்படுகிறது. மேலும், ஒரு வேட்டி, சேலை, 4 லிட்டர் மண்ணெண்ணெய் கூடுத லாக வழங்கப்படும்.
முகாம்களில் தங்கியுள்ள குடும் பங்கள், வீடுகளை இழந்தவர்கள், மீன்பிடி கலன்கள், வல்லம்,கட்டு மரம் சேதமானதால் பாதிக்கப்பட் டுள்ள மீனவ குடும்பங்களுக்கு உடனடி வாழ்வாதார நிவாரணமாக குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5 ஆயிரம், துணிமணிகள், பாத்திர பண்டங்கள் ஆகியவை வாங்க தலா ரூ.3,800 வழங்கப்படும்.
புயலால் உயிரிழந்த 46 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம், சாதாரண காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும்.
உயிரிழந்த 231 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரம், 20 காளை மாடுகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம், 19 கன்றுகளுக்கு தலா ரூ.15 ஆயிரம், 1,181 ஆடு களுக்கு தலா ரூ. 3 ஆயிரம், 14,986 கோழி மற்றும் பறவைகளுக்கு தலா ரூ.100 வழங்கப்படும்.
முழுவதும் சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம், பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4,100 வழங்கப்படும். முழுவதும் சேதமடைந்த குடிசைகள், வீடு களுக்கு பதில் தகுதி வாய்ந்த வர்களுக்கு புதிய வீடு கட்ட உரிய நிதி வழங்கப்படும்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட் சித் துறைக்கு ரூ. 25 கோடி, நெடுஞ் சாலைத் துறைக்கு ரூ.25 கோடி, பொதுப்பணித் துறைக்கு ரூ. 10 கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.2 கோடி, குடிநீர் வடிகால் வாரியத் துக்கு ரூ.5 கோடி, நகராட்சி நிர்வா கத்துறைக்கு ரூ.5 கோடி, பேரூராட்சி களின் இயக்குநரகத்துக்கு ரூ.5 கோடி, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகங் களுக்கு தலா ரூ.5 கோடி, திண்டுக் கல் நிர்வாகத்துக்கு ரூ. 2.5 கோடி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திருச்சி, தேனி மாவட்ட நிர்வாகங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படுகிறது.
பாதிப்புக்குள்ளான 12 மாவட்டங் களில் 32,706 ஹெக்டேர் நெல் பயிர் கள், 30,100 ஹெக்டேர் தென்னை மரங்கள், 7,636 ஹெக்டேர் மக்காச் சோளம், 4,747 ஹெக்டேர் வாழை, 4 ஆயிரம் ஹெக்டேர் காபி பயிர், பயறு, பருத்தி மற்றும் பலா மரங்கள் போன்றவை சேதமடைந்துள்ளன. மேலும் 3,253 ஹெக்டேர் முந்திரி, 500 ஹெக்டேர் கரும்பு, 945 ஹெக்டேர் மா மரங்களும் 2,707 ஹெக்டேர் காய்கறி பயிர்களும் சேதம் அடைந்துள்ளன.
தென்னை மரங்களுக்கு நிவா ரணமாக ஒரு மரத்துக்கு ரூ.600, அவற்றை வெட்டி அகற்ற மரத் துக்கு ரூ.500 என மொத்தம் ரூ.1,100 வழங்கப்படும். சுமார் 175 மரங்கள் நடப்பட்டுள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 500 நிவா ரணம் வழங்கப்படும். இதுதவிர, மறுசாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.72,100 வழங்கப்படும். இதன் மூலம் நிவாரணம் மற்றும் மறுசாகு படிக்கு தென்னை விவசாயிகள் ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சத்து 64,600 பெறுவர்.
நெல், கரும்பு, வாழை, காய்கறி கள் மற்றும் மலர்கள் போன்ற பாசன பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 வழங்கப்படும். இப்பயிர் களை மறுசாகுபடி செய்ய ஆகும் செலவில் 40 முதல் 50 சதவீத மானி யமும் வழங்கப்படும். முந்திரி ஹெக் டேருக்கு ரூ.18 ஆயிரம், அவற்றை வெட்டி அகற்ற மரத்துக்கு ரூ.500, மறுசாகுபடி செய்ய 40 முதல் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
சொட்டு நீர் பாசனத்துக்காக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரையும் இதர விவசாயி களுக்கு 75 சதவீதம் மானியமாக ரூ.75 ஆயிரம் வரையும் மறுசாகுபடி செய்ய வழங்கப்படும்.
மின்சாரம் இல்லாத இடங்களில் ஜெனரேட்டர்கள், லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கப் படும்.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட் டங்களில் மின்சார சீரமைப்புக்காக மின்வாரியத்துக்கு முதல்கட்டமாக ரூ.200 கோடி வழங்கப்படுகிறது.
4,844 மீன்பிடி படகுகள், 5,550 மீன் வலைகள் மற்றும் 5,727 படகு களின் இன்ஜின்கள் சேதமடைந் துள்ளன. முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங் களுக்கு ரூ.42 ஆயிரம், பகுதி சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ.20 ஆயிரம், முழுவதும் சேத மடைந்த எப்.ஆர்.பி படகுகள் மற்றும் வலைகளுக்கு ரூ.85ஆயிரம், பகுதி சேதமடைந்த எப்.ஆர்.பி படகுகள் மற்றும் வலைகளுக்கு ரூ.30 ஆயிரம் வரையும் முழுவதும் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு ரூ. 5 லட்சம், பகுதி சேதமடைந்த விசைப் படகுகளுக்கு ரூ.3 லட்சம் வரையும் வலைகள் மட்டுமே சேதம் அடைந்திருந்தால் ரூ.10 ஆயிரமும் இன்ஜின் பழுது நீக்க ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதி களில் உடனடி மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ. 1,000 கோடி உடனடியாக விடுவிக்கப்படும்.
கஜா புயலால் ஏற்பட்டுள்ள பேரழிவை கருத்தில்கொண்டு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு உடனடியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தேவையான நிதியை அளிக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.
நன்கொடை வழங்க வேண்டும்
மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள், நிறுவனங் கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள், தமிழக அரசு எடுத்து வரும் மாபெரும் நிவாரணம் மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவ வேண்டுகிறேன்.
மேலும், தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவா ரண மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.நிதியை உடனடியாக விடுவித்து முதல்வர் உத்தரவுகுடிசைகளுக்கு ரூ.10 ஆயிரம்புயல் பாதிப்பை இன்று பார்வையிடுகிறார்
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதற்காக இன்று காலை 5.45 மணிக்கு சென்னை யில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து வாகனத்தில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். சேத விவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்துகிறார். ஆய்வுப் பணியை முடித்து இரவே முதல்வர் சென்னை திரும்புவார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனன.