எஸ்சி, எஸ்டி பிரிவு தொழில்முனைவோர் 1,613 பேருக்கு  ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தில் ரூ.223 கோடி கடன்

எஸ்சி, எஸ்டி பிரிவு தொழில்முனைவோர் 1,613 பேருக்கு 
ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தில் ரூ.223 கோடி கடன்
Updated on
1 min read

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத் தைச் சேர்ந்தவர்கள் சொந்தமாக தொழில் தொடங்குவதற்காக ‘ஸ்டாண்ட் -அப் இந்தியா’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016, ஏப். 5-ல் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க கடனாக வழங்கப்படும்.

மிகக் குறைந்த வட்டியில் வழங்கப்படும் இக்கடன் தொகையை பெற்ற 7 ஆண்டுகளுக் குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும், கடன் தொகையை பெற மொத்தக் கடன் தொகையில் 10% தொகையை கடன் பெறுப வர் முன்பணமாக கட்ட வேண்டும். இத்திட்டத் தின் கீழ், நடப்பாண்டில் தமிழகத்தில் ரூ.223 கோடி மதிப்பிலான கடன் 1,613 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கடன் தொகை வழங்கியது மிகவும் குறைவாக உள்ளதால், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த தொழில்முனைவோர்களுக்கு கூடுதலாக கடன் வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, மாநில அளவி லான வங்கியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in