கோயில் நிர்வாகி கொலை வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள்: தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

கோயில் நிர்வாகி கொலை வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள்: தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

தென்காசி: ​திரு​விழா​வில் ஏற்​பட்ட முன்​விரோதம் காரண​மாக கோயில் நிர்​வாகி கொலை வழக்​கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டது.

நெல்லை மாவட்​டம் பாப்​பாக்​குடி அருகே காசி​நாத​புரத்​தில் சீவலப்​பேரி சுடலை​மாட சுவாமி கோயில் உள்​ளது. இங்கு திரு​விழா நடத்​து​வது தொடர்​பாக, அப்​பகு​தி​யைச் சேர்ந்த இரு தரப்​பினரிடையே பிரச்​சினை இருந்​துள்​ளது.

ஒரு பிரிவுக்கு தலை​வ​ராக விநாயகம் என்​பவரும், மற்​றொரு பிரிவுக்கு தலை​வ​ராக மணிவேல் (45) என்​பவரும் செயல்​பட்டு வந்​தனர். இவர்​களிடையே அடிக்​கடி தகராறு ஏற்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், 2015 செப். 2-ம் தேதி மணிவேல் மற்​றும் அவரது ஆதர​வாளர்​கள் அங்​குள்ள கற்​கு​வேல் அய்​ய​னார் கோயிலுக்​குச் சென்​றனர். அப்​போது, விநாயகம் தரப்​பினர் அங்கு சென்​று, மணிவேலிடம் தகராறு செய்​துள்​ளனர். அப்​போது, மணிவேலை ஆயுதங்​களால் தாக்​கி​யுள்​ளனர்.

தடுக்க முயன்​றவர்​கள் மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. மேலும், மணிவேலின் டிராக்​டரும் சேதப்​படுத்​தப்​பட்​டது. இதில் காயமடைந்த மணிவேல் உட்பட 3 பேர் நெல்லை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மணிவேல் உயி​ரிழந்​தார். இது தொடர்​பாக பாப்​பாக்​குடி போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, 17 பேரைக் கைது செய்​தனர். இந்த வழக்கு தென்​காசி மாவட்ட கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. விசா​ரணை​யின்​போது, குற்​றம் சுமத்​தப்​பட்ட முத்​துக்​கு​மார், பிச்​சை​யா, முத்​து​ராஜ் ஆகியோர் இறந்​தனர்.

வழக்கை விசா​ரித்த நீதிபதி எஸ்​.மனோஜ்கு​மார், குற்​றம் சுமத்​தப்​பட்ட விநாயகம் (47), உலக​நாதன் (48), சிவசுப்​பிரமணி​யன் (38), சுடலை (29), சுப்​பிரமணி​யன் (60), சந்​தானம் (30), சிவன்​சேட் (42), மாணிக்​க​ராஜ் என்ற மாரி (29), வேல்​துரை (43), கருப்​பையா (57), ரமேஷ் (30), பண்​டாரம் (73), மணிவேல் (43), கலை​வாணன் (29) ஆகியோ​ருக்கு கொலை குற்​றத்​துக்​காக ஓர் ஆயுள் தண்​டனை, கொலை முயற்​சிக்கு ஓர் ஆயுள் தண்​டனை, சொத்​துகளை சேதப்​படுத்​தி​யதற்​காக 3 ஆண்​டு​கள் சிறை மற்​றும் தலா ரூ.41 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்​பளித்​தார்.இந்த வழக்​கில் அரசுத் தரப்​பில் வழக்​கறிஞர் எஸ்​.வேலுச்​சாமி ஆஜரா​னார்.

கோயில் நிர்வாகி கொலை வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள்: தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஈரம் காயாத அளவுக்கு தொடர்ந்து மழை பெய்யும்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in