

கோப்புப்படம்
மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலில் பறக்கும் படையினரின் வாகன சோதனை மூலம், இதுவரையில் ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் அக்.6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகளை மேற்கொள்வதற்காக 9 பறக்கும் படை குழுக்களும், 9 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 2 காணொளி கண்காணிப்பு குழுக்களும், 1 காணொளி பார்வை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதலாக 5 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பறக்கும் படையினர் மதுராந்தகம் தொகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் 24-ம் தேதி வரையில் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ரூ.14.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் நரேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலுக்காக பணம் வழங்குவதை தடுப்பதற்கான அனைத்தும் பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.