மதுரை, திருப்பூர், சேலத்துக்கு புதிய காவல் ஆணையர்கள்: 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

மதுரை, திருப்பூர், சேலத்துக்கு புதிய காவல் ஆணையர்கள்: 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் 14 ஐபிஎஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். மதுரை, திருப்பூர், சேலத்​துக்கு புதிய காவல் ஆணை​யர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதுகுறித்து உள்​துறை செயலர் கே.மணி​வாசன் நேற்று பிறப்​பித்த உத்​தர​வு: தமிழக மின்​வாரிய விஜிலென்ஸ் அதி​காரி​யாக இருந்த ஆயுஷ் மணி திவாரி தலை​மை​யிடத்து கூடு​தல் டிஜிபி-​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

திருப்​பூர் காவல் ஆணை​ய​ராக இருந்த எஸ்​.​ராஜேந்​திரன் மதுரை காவல் ஆணை​ய​ராக​வும், அங்கு காவல் ஆணை​ய​ராக இருந்த கபில்​கு​மார் சரத்​கர் வட சென்னை கூடு​தல் ஆணை​ய​ராக​வும், அப்​ப​த​வி​யில் இருந்த பிர​வேஷ் குமார் கடலோர பாது​காப்பு குழும ஐஜி-​யாக​வும் பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ளனர்.

பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றத் தடுப்பு பிரிவு ஐஜி-​யாக உள்ள எஸ்​.​ராஜேஸ்​வரி திருப்​பூர் காவல் ஆணை​ய​ராக​வும், சேலம் காவல் ஆணை​ய​ராக இருந்த அனில் குமார் கிரி, சிலை கடத்​தல் தடுப்பு பிரிவு ஐஜி-​யாக​வும், சென்னை போக்​கு​வரத்து காவல் கூடு​தல் ஆணை​ய​ராக இருந்த ஜி.​கார்த்​தி​கேயன் சமூக நீதி மற்​றும் மனித உரிமை​கள் பிரிவு ஐஜி-​யாக​வும், அப்​ப​த​வி​யில் இருந்த பி.​சா​முண்​டீஸ்​வரி சென்னை போக்​கு​வரத்து காவல் கூடு​தல் ஆணை​ய​ராக​வும் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

அதே​போல், காவல்​துறை நவீன மயமாக்​கல் பிரிவு ஐஜி ஏ.ஜி.​பாபு டிஜிபி அலு​வல​கத்​தில் செயல்​படும் தலை​மை​யிடத்து ஐஜி​யாக​வும், சென்னை காவல் தலை​மை​யிடத்து ஐஜி ஜோஷி நிர்​மல் குமார் சேலம் காவல் ஆணை​ய​ராக​வும், பணி​யமைப்பு பிரிவு ஐஜி பி.சி தேன்​மொழி சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு கூடு​தல் காவல் ஆணை​ய​ராக​வும், அப்​ப​த​வி​யில் இருந்த ராதிகா நிர்​வாகப்​ பிரிவு ஐஜி​யாக​வும், அங்​கிருந்த சி.மகேஸ்​வரி லஞ்ச ஒழிப்​புத்​துறை (செல்​-1) ஐஜி​யாக​வும், அப்​ப​த​வி​யில் இருந்த துரைகு​மார் பணி​யமைப்பு ஐஜி​யாக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு உள்​துறை செயலர் கே.மணி​வாசன் நேற்று பிறப்​பித்த உத்​தர​வில் கூறப்​பட்​டுள்​ளது.

மதுரை, திருப்பூர், சேலத்துக்கு புதிய காவல் ஆணையர்கள்: 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
மாநிலத் தலைவர் பதவியில் தொடர மனம் விரும்பவில்லை: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in