கருவின் பாலினத்தை தெரிவித்தால் நடவடிக்கை: அரசு மருத்துவர்களுக்கு மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

கருவின் பாலினத்தை தெரிவித்தால் நடவடிக்கை: அரசு மருத்துவர்களுக்கு மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: கரு​வில் உள்ள சிசு​வின் பாலினத்தை தெரிவிக்​கும் அரசு மருத்​து​வர் மீது துறைரீதி​யாக மட்​டுமின்​றி, காவல் துறை மூல​மாக​வும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.

மாதவரம் புனித அன்​னாள் கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி வளாகத்​தில் `நலம் காக்​கும் ஸ்டா​லின்' மருத்​துவ முகாம் நேற்று நடந்​தது. இந்த முகாமில் மக்​களுக்​கான இசிஜி பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை மற்​றும் ஆய்​வகப் பரிசோதனை​களை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் பார்​வை​யிட்​டு, மாற்​றுத் திற​னாளி​களுக்​கான மருத்​து​வச் சான்​றிதழினை வழங்​கி​னார்.

மாதவரம் எம்​எல்ஏ சுதர்​சனம், பொது சுகா​தா​ரம் மற்​றும் நோய்த் தடுப்பு மருந்​துத் துறை இயக்​குநர் சோமசுந்​தரம், மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் சுகந்தி ராஜகு​மாரி ஆகியோர் உடன் இருந்​தனர். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறிய​தாவது: முதல்​வர் ஸ்​டா​லின் கடந்த ஆக. 2-ம் தேதி நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டத்தை தொடங்கி வைத்​தார். இந்த திட்​டத்​தில் 17 வகை​யான சிறப்பு மருத்​துவ சேவை​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. தற்​போது 6-வது வார​மாக தமிழகம் முழு​வதும் 38 மாவட்​டங்​களில் 38 இடங்​களில் முகாம்​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

ஒவ்​வொரு வார​மும் சனிக்​கிழமை காலை 9 மணி முதல் மாலை5 மணி வரை முகாம் நடை​பெறுகிறது. இது​வரை 5 வாரங்​களாக 185 முகாம்​கள் நடத்​தப்​பட்​ட​தில் 2,60,910 பேர் பயன் பெற்​றுள்​ளனர். கடந்த இரண்டு வாரங்​களுக்கு முன்பு ஒரு மருத்​து​வர் நடத்தி வரும் ஸ்கேன் சென்​டரில், கரு​வில் உள்ள சிசு பாலினம் தெரி​வித்த புகார் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. அதே​போல, சேலம் பகு​தி​யில் ஒரு ரேடி​யாலாஜி மருத்​து​வர் கரு​வில் உள்ள பாலினம் குறித்து தெரி​வித்​த​தாக புகார் வந்​தது. அவர் மீது துறைரீதி​யாக நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டு, காவல் துறை​யிலும் புகார் தரப்​பட்​டுள்​ளது. சம்​மந்​தப்​பட்​ட​வர்​கள் மீது சட்டரீதி​யான நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்.

இதுபோன்ற செயல்​கள் செய்​யக்​கூ​டாது. இது மனி​தாபி​மானமற்ற செயல். தமிழகத்​தில் ஆண் குழந்​தை​யாக இருந்​தா​லும்,பெண் குழந்​தை​யாக இருந்தா​லும்இரண்​டும் சமம் என்ற வகை​யில்பாவிக்​கப்​பட்டு வருகிறது. கரு​வில்உள்ள பாலினத்தை தெரிவிக்​கக்கூடாது என்​பது தொடர்பாக அரசுபல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. அரசு மருத்​து​வர்​கள் இந்த மாதிரி​யாக செயல்​களை செய்​வதை ஏற்​றுக் கொள்ள முடி​யாது. அரசு ஊழி​யராக இருந்​தால், விதி​முறை​களின்​படி துறைரீதி​யான நடவடிக்​கை, சட்ட நடவடிக்​கை, காவல் துறை நடவடிக்கை மட்​டுமே மேற்​கொள்​ளப்​படும். சொத்​துகள் முடக்​கு​வது என்​பது போன்​ற நடவடிக்​கைகள்​ எல்​லாம்​ இல்​லை. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in