Published : 05 Jul 2025 12:41 PM
Last Updated : 05 Jul 2025 12:41 PM
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், சுற்றுப்பயணத்துக்கான பாடல் மற்றும் லோகோ அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. இந்நிலையில், அதிமுக தலைமையிலான அணியில் பாஜக இணைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார்.
முதல்கட்டமாக ஜூலை 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்க இருக்கிறார். அதோடு அவர் 23-ம் தேதி தஞ்சை பட்டுக்கோட்டையில் நிறைவு செய்கிறார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரப் பயணம் தொடர்பான லோகோ மற்றும் பாடலை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை கழக அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது.
இது குறித்த வீடியோவை அதிமுக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “மக்களைக் காப்போம். தமிழகத்தை மீட்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) July 5, 2025
இலச்சினை வெளியீடு!#மக்களைக்_காப்போம்#தமிழகத்தை_மீட்போம் pic.twitter.com/IeScT1yw38
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT