Published : 30 Jun 2025 06:00 AM
Last Updated : 30 Jun 2025 06:00 AM

அமித் ஷா குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து சென்னையில் நாளை பாஜக ஆர்ப்பாட்டம்

சென்னை: அமித் ஷா குறித்து அவதூறாக பேசிய திமுக எம்​.பி. ஆ.ரா​சாவை கண்​டித்து சென்​னை​யில் நாளை பாஜக ஆர்ப்பாட்டம் அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ரூ.1,76,000 கோடி ஊழல் வழக்​கில் சிக்கி திகார் ஜெயி​லில் இருந்த திமுக எம்பி ஆ.ரா​சா, அரசி​யல் நாகரீகம் அற்ற முறை​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா குறித்து சமீபத்​தில் பேசி​யிருப்​பது மிக​வும் கண்​டிக்​கத்​தக்​கது. இப்​போதும் இவருக்கு எதி​ராக டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் 2ஜி வழக்கு தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது என்​ப​தை​யும் மக்​கள் அறி​வார்​கள்.

அரு​வருப்​பான முறை​யில் பொது வெளி​யில் பேசுவதை ஆ.ராசா வழக்​க​மாகக் கொண்​டிருக்​கிறார். ஒரு முன்​னாள் மத்​திய அமைச்​ச​ராக செயல்​பட்​ட​வர் தரம் தாழ்ந்து மற்ற தலை​வர்​களை பேசுவது எந்த வகை​யில் நியா​யம்? தமிழக முதல்​வரும் ஆ.ராசா போன்​றவர்​கள் பேசுவதை கண்​டிக்​காமல் வேடிக்கை பார்ப்​பது வேதனைக்​குரியது - கண்​டிக்​கத்​தக்​கது.

நாங்​கள் என்ன வேண்​டு​மா​னாலும் பேசுவோம் என்ற சர்​வா​தி​கார போக்கை திமுக கடைப்​பிடிக்​கிற​தா? அரசி​யலில் என்ன பேசுவது என்ற வரை​முறை அற்ற பிற்​போக்​குத்​தன​மான கொள்​கைகளை திமுக கடைபிடிக்​கிற​தா? எல்​லோருமே பதி​லுக்கு பதில் பேசி​னால் தமிழக மக்​கள் என்ன நினைப்​பார்​கள்? ஜனநாயகத்தை காப்​பாற்ற வேண்​டிய​வர்​கள் நாகரி​கமற்ற முறை​யில் பேசுவது மக்​களிடையே வெறுப்பை தான் ஏற்​படுத்​தும்.

வேடிக்கை பார்க்க முடியாது: ஆ.ராசா போன்​றவர்​கள் பேசுவதை வேடிக்கை பார்த்​துக் கொண்டே இருக்க முடி​யாது. ஆ.ராசா போன்​றவர்​களின் சுய ரூபத்தை மக்​களுக்கு எடுத்​துக்​காட்​டும் வித​மாக​வும், இது போன்ற அறிவற்ற வகை​யில் பேசுவதை தட்டி கேட்​கும் வகை​யிலும் நாளை(ஜூலை 1-ம் தேதி) செவ்​வாய்க்​கிழமை சென்னை பெருங்​கோட்​டத்​தில் 7 இடங்​களில், தனித்​தனி​யாக கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என்​பதை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் மாவட்​டம் தோறும் முக்​கிய மாநில நிர்​வாகி​கள் மாவட்​டத் தலை​வர்​கள் தலை​மையேற்று நடத்த இருக்​கிறார்​கள். நாளை நடை​பெறும் ஆர்ப்​பாட்​டங்​களில் கட்​சி​யின் தொண்​டர்​கள் நிர்​வாகி​கள் ஆதர​வாளர்​கள் பொது​மக்​கள் பல்​லா​யிரக்​கணக்​கில் கலந்து கொள்ள இருக்​கிறார்​கள் என்​ப​தை​யும், இது போன்ற அராஜக போக்கை தொடர்ந்து திமுக வெளிப்​படுத்​தி​னால் பாஜக தொடர் போ​ராட்​டத்தை நடத்​தும் என்​பதை தெரி​வித்​துக்​ கொள்​கிறேன்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்டு​உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x