புதுச்சேரியில் பதவிக்காக போட்டி நிலவும் சூழலில் பாஜக அமைச்சர், 3 நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமா - பின்னணி என்ன?

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் ராஜினாமா கடிதத்தை அளிப்பதற்காக வந்த அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார். | படம்: எம்.சாம்ராஜ் |
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் ராஜினாமா கடிதத்தை அளிப்பதற்காக வந்த அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார். | படம்: எம்.சாம்ராஜ் |
Updated on
1 min read

புதுச்​சேரி: கட்​சிக்​குள் பதவிக்​காக போட்டி நில​வும் சூழலில், புதுச்​சேரி பாஜக அமைச்​சர் சாய் ஜெ.சர​வணன்​கு​மார் மற்​றும் பாஜக நியமன எம்​எல்​ஏக்​கள் 3 பேர் ராஜி​னாமா செய்​தனர். புதுச்​சேரி​யில் 2021-ல் நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வென்ற என்​.ஆர்​.​காங்​கிரஸ் - பாஜக கூட்​டணி ஆட்சி அமைந்​தது. தேஜக கூட்​ட​ணி​யின் புதுச்​சேரி தலை​வ​ரான ரங்​க​சாமி முதல்​வ​ரா​னார். இரு கட்​சிகளுக்​கும் தலா இரு அமைச்​சர் பதவி​கள் ஒதுக்​கப்​பட்​டன.

பாஜகவைச் சேர்ந்த செல்​வம் பேர​வைத் தலை​வ​ராக​வும், அமைச்சர்களாக நமச்​சி​வா​யம், சாய் ஜெ.சர​வணன்​கு​மார் ஆகியோரும் பொறுப்​பேற்​றனர். மேலும், பாஜகவைச் சேர்ந்த ராமலிங்​கம், அசோக்​பாபு, வெங்​கடேசனுக்கு நியமன சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் பதவி வழங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், பாஜக எம்​எல்​ஏக்​கள் ஜான்​கு​மார், கல்​யாணசுந்​தரம், ரிச்​சர்ட் ஆகியோர் அமைச்​சர் அல்​லது வாரி​யத் தலை​வர் பதவி வழங்​கு​மாறு வலி​யுறுத்தி வந்​தனர். வேறு சிலர் நியமன எம்​எல்ஏ பதவி​களை கேட்டு வந்​தனர். பதவி வழங்​காத​தால் கட்​சிக்​குள் அதிருப்தி நில​வியது.

இந்​நிலை​யில், டெல்​லி​யில் இருந்து வந்த பாஜக மேலிடப் பொறுப்​பாளர் நிர்​மல்​கு​மார் சுரா​னா​விடம், மாநில உள்​துறை அமைச்​சர் நமச்​சி​வா​யம், கட்​சி​யின் மாநிலத் தலை​வர் செல்​வகணபதி எம்​.பி. உள்​ளிட்​டோர் ஆலோ​சனை நடத்​தினர். பின்​னர் அவர்​கள் முதல்​வர் ரங்​க​சாமியை நேற்று சந்​தித்து பேசினர். பின்​னர், சாய் ஜெ.சர​வணன்​கு​மார் முதல்​வரிடம் ராஜி​னாமா கடிதத்தை வழங்​கி​னார்.

தொடர்ந்​து, ஆளுநர் மாளிகை சென்ற முதல்​வர் ரங்​க​சாமி, துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதனை சந்​தித்​தார். பின்​னர் ரங்​க​சாமி செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “அமைச்​சர் ஜெ.சர​வணன்​கு​மார் அளித்த ராஜி​னாமா கடிதத்தை ஆளுநர் ஏற்​றுக்​கொண்​டார். அவர் ராஜி​னாமா செய்​தது, பாஜக உட்​கட்சி விவ​காரம்” என்​றார். ராஜி​னாமா குறித்து சாய் ஜெ.சர​வணன்​கு​மாரிடம் கேட்​டதற்​கு, “பிரதமரின் உத்​தர​வுப்​படி எனது பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளேன்” என்​றார்.

புதிய அமைச்சர்... இதற்​கிடை​யில், நியமன எம்​எல்​ஏக்​களான ராமலிங்​கம், வெங்​கடேசன், அசோக்​பாபு ஆகியோ​ரும் பேர​வைத் தலை​வரிடம் ராஜி​னாமா கடிதத்தை அளித்​தனர். அவர்​களுக்​குப் பதிலாக காரைக்​கால் தொழில​திபர் ராஜசேகர், முன்​னாள் எம்​எல்ஏ தீப்​பாய்ந்​தான், மூத்த நிர்​வாகி முதலி​யார்​பேட்டை செல்​வம் ஆகியோர் நியமன எம்​எல்​ஏக்​களாக நியமிக்​கப்​படலாம் என்றும், பாஜக சார்​பில் புதிய அமைச்​ச​ராக எம்​எல்ஏ ஜான்​கு​மார்​ தேர்​வு செய்​யப்​பட உள்​ள​தாக​வும்​ தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in