உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல், தொடர் இருமல்: அரசு, கட்சி நிகழ்ச்சிகள் தள்ளிவைப்பு

உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல், தொடர் இருமல்: அரசு, கட்சி நிகழ்ச்சிகள் தள்ளிவைப்பு
Updated on
1 min read

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல், தொடர் இருமல் இருப்பதால் அவரது அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்பட்டு வருகிறார். அடுத்த சில நாட்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால், அவர் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உதயநிதியின் உடல்நலம் தேறி விரைவில் குணமடைய வேண்டும் என அரசியல் தலைவர்களும், அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும் தெரிவித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் பூரணமாக குணமடைந்த பிறகு, தள்ளிவைக்கப்பட்ட அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளுக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்படும் என்று கட்சியினர் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in