கவரைப்பேட்டை - பொன்னேரி இடையே பராமரிப்பு பணி: 2 நாட்களுக்கு மின்சார ரயில் சேவை ரத்து

கவரைப்பேட்டை - பொன்னேரி இடையே பராமரிப்பு பணி: 2 நாட்களுக்கு மின்சார ரயில் சேவை ரத்து
Updated on
1 min read

சென்னை: சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித் தடத்தில் உள்ள கவரைப்பேட்டை-பொன்னேரி இடையே பராமரிப்பு பணி காரணமாக, சூளூர்பேட்டை வழித் தடத்தில் இன்றும் (24-ம்), நாளை மறுநாளும் (26-ம் தேதி) புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

இதன்படி, சென்னை சென்ட்ரல்-சூளூர்பேட்டை இடையே காலை 5.40, 10.15, 10.30, நண்பகல் 12.10, சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.30, 11.35, மதியம் 1.40, ஆவடி-சென்னை சென்ட்ரல் இடையே காலை 4.25, சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே நண்பகல் 12.40, மதியம் 2.40 மற்றும் சூளூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 8.10, நெல்லூர்-சூளூர்பேட்டை இடையே காலை 10.20,

கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 1, 2.30, 3.15, 3.45, 4.30 சூளூர்பேட்டை-சென்னை சென்ட்ரல் இடையே நண்பகல் 12.35, மதியம் 1.15, பிற்பகல் 3.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்றும், நாளை மறுதினமும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.55, கும்மிடிப்பூண்டி-தாம்பரம் இடையே பிற்பகல் 3 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை நாளையும், நாளை மறுதினமும் சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்படுகிறது.

எனினும், பயணிகளின் வசதிக்காக நாளையும், நாளை மறுதினமும் சில சிறப்ப ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

இதன்படி, சென்னை சென்ட்ரல்-பொன்னேரி இடையே காலை 10.30, சென்னை சென்ட்ரல்-மீஞ்சூர் இடையே காலை 11.35, மதியம் 1.40, சென்னை கடற்கரை-எண்ணூர் இடையே நண்பகல் 12.40, சென்னை கடற்கரை-பொன்னேரி இடையே மதியம் 2.40, பொன்னேரி-சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 1.18, மீஞ்சூர்-சென்னை சென்ட்ரல் இடையே பிற்பகல் 3, மாலை 4.14 எண்ணூர்-சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 3.56, பொன்னேரி-சென்னை கடற்கரை இடையே மாலை 4.47 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in