முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு: இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு: இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்
Updated on
2 min read

சென்னை: பிரதமர் மோடி தலை​மை​யில் இன்று காலை நடை​பெறும் நிதி ஆயோக் கூட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக டெல்லி சென்ற முதல்​வர் ஸ்டா​லினுக்கு உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி, மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி ஆகியோரை அவர்​களது இல்​லத்​தில் சந்​தித்து ஸ்டா​லின் முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார்.

டெல்​லி​யில் பிரதமர் மோடி தலை​மை​யில் நிதி ஆயோக் அமைப்​பின் 9-வது நிர்​வாககுழு கூட்​டம் இன்று நடை​பெறுகிறது. இதில் பங்​கேற்க மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களின் முதல்​வர்​களுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​பேரில், தமிழக முதல்​வர் ஸ்டா​லினும் இதில் பங்​கேற்​கிறார்.

இதையொட்​டி, சென்​னை​யில் இருந்து விமானம் மூலம் அவர் நேற்று காலை 9.30 மணிக்கு டெல்லி புறப்​பட்டு சென்​றார். சென்னை விமான நிலை​யத்​தில், அமைச்​சர்​கள்,திமுக நிர்​வாகி​கள் அவரை வழியனுப்பி வைத்​தனர். முதல்​வருடன் தலை​மைச் செயலர் முரு​கானந்​தம், முதல்​வரின் செயலர் சண்​முகம் உள்​ளிட்​டோரும் சென்​றனர்.

டெல்​லிக்கு பகல் 12.50 மணிக்கு வந்​தடைந்த முதல்​வரை விமான நிலை​யத்​தில் திமுக மக்​களவை குழு தலை​வர் டி.ஆர்​.​பாலு, மாநிலங்​களவை குழு தலை​வர் திருச்சி சிவா, எம்​.பி.க்​கள், ஆ.ரா​சா, ஜெகத்​ரட்​சகன்,பி.​வில்​சன், செல்​வகணபதி உள்​ளிட்​டோர் பூங்​கொத்து வழங்கி வரவேற்​றனர். விமான நிலை​யத்​தின் வெளியேதிரண்​டிருந்த தமிழர்​களும் முதல்​வருக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். பின்​னர், தமிழ்​நாடு இல்​லம் சென்ற முதல்​வர், காவல் துறை​யினரின் அணிவகுப்பு மரி​யாதையை ஏற்​றுக் கொண்​டார். அங்கு சிறிது நேரம் ஓய்​வெடுத்​தார்.பிற்​பகலில், டெல்​லி​யில் உள்ள இல்​லத்​தில் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் சோனியா காந்​தி, மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி ஆகியோரை சந்​தித்​தார். இந்த சந்​திப்பு ஒரு மணி நேரத்​துக்​கும் மேலாக நீடித்​தது.

2026 சட்​டப்​பேரவை தேர்​தல், இண்​டியா கூட்​டணி குறித்து அவர்​கள் தீவிர ஆலோ​சனை நடத்​தி​ய​தாககூறப்​படு​கிறது. அப்போது, டி.ஆர்.பாலுவும் உடன் இருந்தார். இதுகுறித்து முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட சமூக வலைதள பதி​வில் கூறியுள்ளதாவது: டெல்​லி​யில் சோனியா காந்தி, அன்பு சகோ​தரர் ராகுல் காந்தி ஆகியோரை அவர்​களது இல்​லத்​தில் சந்​தித்​தேன். அவர்​களை ஒவ்​வொரு முறை சந்​திக்​கும்​போதும் ஒரு சிறப்பு அரவணைப்பு இருக்​கிறது. ஒரு​போதும் இது வெறும் சந்​திப்​பாக இல்​லாமல், குடும்​பத்​துடன் இருப்​பது போன்ற உணர்​வையே அளிக்​கிறது. இவ்வாறு முதல்வர் தெரி​வித்​துள்​ளார்.

முன்னதாக, டெல்லி சாணக்கியபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

நலம் விசாரித்தார்: தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வரும் தமிழக சுற்றுலா பயணி பரமேஸ்வரனை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிகழ்வுகளின்போது தமிழக பொதுப்பணி துறை
அமைச்சர் எ.வ.வேலு, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

டெல்லி பாரத் மண்​டபத்​தில் பிரதமர் மோடி தலை​மை​யில் இன்று காலை நடை​பெறும் நிதி ஆயோக் கூட்​டத்தில் முதல்​வர் ஸ்டாலின் பங்​கேற்​கிறார்.

தமிழகத்​துக்கு ஒருங்​கிணைந்த கல்வி (சமக்ர சிக்​‌ஷா) திட்ட நிதி, பேரிடர் நிதி உள்​ளிட்ட நிலுவை நிதி​களை விடுவிக்​கு​மாறு இந்த கூட்​டத்​தில் அவர் வலி​யுறுத்​துகிறார். நேரம் கிடைக்​கும் பட்​சத்​தில், பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்​திக்க வாய்ப்பு உள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது. இதை தொடர்ந்​து, முதல்​வர் ஸ்டா​லின் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்​லி​யில் இருந்து புறப்​பட்​டு, இரவு 10.30மணிக்கு சென்னை திரும்​பு​கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in