முதல்வரின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

முதல்வரின் தாயார் மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் (92).

வயது முதிர்வு காரணமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெறுகிறார். இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in