தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக லக்‌ஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை வடக்கு மண்டல சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர், காவல் துறை தலைமையக ஐ.ஜியாக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். காவல் துறை தலைமையக ஐ.ஜி. எஸ்.லக்‌ஷ்மி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி ப்ரவேஷ் குமார், சென்னை வடக்கு மண்டல சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in