

சென்னை; அதிமுகவின் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் விரிவாக காணொலி காட்சி மூலமாக ஆலோசனை வழங்கினார்.
சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் காணொளிக் காட்சி மூலம் (Video Conference), கழக அமைப்பு ரீதியாக செயல்படும் 82 மாவட்டங்களுக்கான மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டங்களுக்கு உட்பட்ட தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக சார்பு அணிகளின் மாநில துணை நிர்வாகிகள்,
முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் மாவட்டச் செயலாளர்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிக் கழகச் செயலாளர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளிடையே, கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக தீவிரமாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.