Published : 26 Feb 2025 06:30 AM
Last Updated : 26 Feb 2025 06:30 AM

தவெக​வின் இரண்​டாம் ஆண்டு தொடக்க விழா: முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்

பூஞ்​சேரி பகுதி​யில் உள்ள தனியார் நட்சத்திர விடு​தி​யில் இன்று நடைபெற உள்ள தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழா​வுக்காக விடு​தி​யின் ​முகப்பு பகு​தி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள அலங்​கார வளைவுகள்.

மாமல்லபுரம்: உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்க உள்ளதால், அக்கட்சியின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் பிப். 26-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது. இதையடுத்து, மேற்கண்ட பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர சொகுசு விடுதியில் அதற்கான முன்னேற்பாtடு பணிகள் தொடர்பாக, அந்தக் கட்சியின் பொதுச் செயலர் புஸ்ஸி என்.ஆனந்த் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆய்வு செய்தார்.

இதில், அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். மேலும், பவுன்ஸ்சர்ஸ்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். மேலும், 2-ம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து வரும் 2,500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், காலை 10 மணிக்கு தொடங்க உள்ளதாக கூறப்படும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நிறைடையும் என அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், அனைவருக்கு உணவு தயாரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்நிகழ்ச்சிக்காக ஈசிஆர் சாலையின் நடுவே உள்ள மிடியனில் அக்கட்சியின் கொடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், நட்சத்திர விடுதியின் முகப்பு பகுதியில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், விடுதியின் முகப்பு பகுதியில் ஈசிஆர் சாலையின் சர்வீஸ் சாலையை ஆக்கிரமத்து, இரும்புகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால், ஈசிஆர் சாலையில் வாகன நெரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸார் சாலையை ஆக்கிரமத்து அமைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த தடுப்புகள் அகற்றப்பட்டன.

மேலும், நிகழ்ச்சி தொடர்பான செய்தி சேகரிப்பதற்காக வந்திருந்த செய்தியாளர்களுக்கு உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து, விடுதியின் முகப்பில் நின்று செய்தியாளர்கள் செய்தி சேகரித்தனர். ஆனால், நிகழ்ச்சியின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட தனியார் காவலர்கள் செய்தியாளர்கள் அங்கு நிற்ககூடாது என கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. வாகன நெரிசல் ஏற்படுவதை தடுப்பதற்காக பூஞ்சேரியில், 50-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x