நாகையில் ரூ.135 கோடி போதைப்பொருள் கடத்தல்: சிக்கிய 4 பேருக்கும் சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பா?

30 மணி நேரம் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் விசாரணை
பூபாலன், மணிகண்டன், சதீஷ்குமார், சுகன்

பூபாலன், மணிகண்டன், சதீஷ்குமார், சுகன்

Updated on: 
1 min read

நாகப்பட்டினம்: நாகையில் ரூ.135 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தில் ரூ.135 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், தவெக மாவட்டச் செயற்குழு உறுப்பினராக இருந்தவரும், வழக்கறிஞருமான பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அவர்களை நாகை சுங்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தொடர்ந்து 30 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸார் 2 பேரிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அதேபோல, கடந்த செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் காரைக்காலில் இருந்து ரூ.6.08 கோடி மதிப்புள்ள 7.605 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கடத்த முயற்சித்த இலங்கையை சேர்ந்தவர் உட்பட 4 பேரை காரைக்கால் போலீஸார் கைது செய்தனர். இதனால் நாகை கடத்தல் வழக்குக்கும், காரைக்கால் கடத்தல் வழக்குக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது சிக்கியுள்ள 135 கிலோ போதைப்பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? கடத்தலுக்கான திட்டம் தீட்டப்பட்டது எப்படி? இந்தக் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை 5 தகரப் பெட்டிகளில் வைத்து பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பூபாலனின் காரும் பறிமுதல் செய்யப்பட்டு நாகை சுங்கத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>பூபாலன்,&nbsp;மணிகண்டன்,&nbsp;சதீஷ்குமார்,&nbsp;சுகன்</p></div>
சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை: பாரிமுனையில் 17.5 செ.மீ பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in