ஒரே ஆண்டில் சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் வருவாய் ரூ.139 கோடியாக அதிகரிப்பு: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிறுவப்படுமா?

ஒரே ஆண்டில் சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் வருவாய் ரூ.139 கோடியாக அதிகரிப்பு: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிறுவப்படுமா?
Updated on
1 min read

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமைமருத்​துவ​மனை​களி​லும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்தவேண்​டும் என 2017-ல் பொதுநல வழக்கு ஒன்றில் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்​பித்​திருந்​தது. ஆனாலும், அனைத்து அரசுமருத்​துவ​மனை​களி​லும் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதிஇதுவரை ஏற்படுத்​தப்​பட​வில்லை.

அரசு மருத்​துவ​மனை​களில் சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்​திரங்களை நிறுவி, அவற்​றைச் செயல்​படுத்​தும் பணிகளை தமிழ்​நாடு மருத்துவ சேவைக் கழகம் நிர்​வகித்து வருகிறது. அரசு மருத்​துவ​மனை​களில் இதுவரை 133 சிடி ஸ்கேன், 42 எம்ஆர்ஐ ஸ்கேன்கள் நிறு​வப்​பட்​டுள்ளன. சிடி ஸ்கேன் எடுக்க ரூ.500, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மக்கள் இந்த இருஸ்கேன்​களை​யும் மருத்​துவக்காப்​பீடு மூலம் எடுக்க நடைமுறைச் சிக்கல் உள்ள​தால், பலரும் பணம் செலுத்​தியே ஸ்கேன் எடுக்​கின்​றனர்.

இவ்வாறு பெறப்​பட்ட கட்டணம் மூலம் கடந்த 5 ஆண்டு​களில்ரூ.511 கோடி வருவாய், தமிழ்​நாடு மருத்துவ சேவைக் கழகத்​துக்கு கிடைத்​துள்ளது. 2019-20நிதி​யாண்​டில் ரூ.72 கோடி கிடைத்த நிலை​யில், 2023-24 நிதியாண்​டில் மட்டும் ரூ.139 கோடியாக வருவாய் அதிகரித்​துள்ளதாக மதுரை கே.கே.நகரை சேர்ந்தசுகா​தாரச் செயல்​பாட்​டாளர் வெரோனிகா மேரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்​தில் தகவல் பெற்றுள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறும்​போது, “அனைத்து அரசு மாவட்டதலைமை மருத்​துவ​மனை​களி​லும் ஸ்கேன் மையங்களை நிறு​வுவ​தால், தமிழ்​நாடு மருத்துவ சேவைக்கழகத்​துக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை. உசிலம்பட்டி, பெரியகுளம், காரைக்குடி, கோவில்​பட்டி, பத்மநாபபுரம், அறந்​தாங்கி, மணப்​பாறை, கும்​ப​கோணம் உள்ளிட்ட பல மாவட்ட மருத்​துவ​மனை​களில் நீதி​மன்றம் உத்தரவு பிறப்​பித்து 7 ஆண்டுகள் கடந்​தும் இவை பயன்​பாட்டுக்கு வரவில்லை” என்றார்.

ரூ.6 கோடி வரை செலவாகும்... இது தொடர்பாக வெரோனிகா மேரி அனுப்பிய கோரிக்கைமனுவுக்கு தமிழ்​நாடு மருத்துவ சேவைக் கழகம் அளித்த பதிலில், “எம்​ஆர்ஐ ஸ்கேன் நிறுவ ரூ.6 கோடி வரை செலவாகும். தமிழக அரசிட​மிருந்து எவ்வித நிதி​யும் வழங்​கப்​படு​வ​தில்லை. உள் ​மாவட்ட மருத்​துவ​மனை​களில் இல்​லா​விட்​டாலும், ​மாவட்ட தலை​மை​யிடங்​களில் உள்ள மருத்​துவ​மனை​களில் எம்​ஆர்​ஐ ஸ்​கேன்​ வசதி உள்​ளது” எனத்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in