''முதல்வர் ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல'' - ஆளுநர் மாளிகை கண்டனம்

ஆளுநர் ரவி | முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர் ரவி | முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: “சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதல்வர் ஸ்டாலின் அவமதித்துவிட்டார். அடிப்படை கடமைகளை செய்ய சொல்வதை, அபத்தமானது சிறுபிள்ளைத்தனமானது என்பதா?” என முதல்வருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லையென கூறி ஆளுநர் வெளியேறினார். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்நிலையில், இது குறித்து ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் தளத்தில், “தமிழக முதல்வர் ஸ்டாலின், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் அபத்தமானது மற்றும் சிறுபிள்ளைத்தனமானது என்கிறார்.

இந்தியாவை ஒரு தேசமாக; இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி.

இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in