சென்னை மாரத்தான்: மெட்ரோ ரயில்கள் நாளை அதிகாலை 3 மணிமுதல் இயக்கம்

சென்னை மாரத்தான்: மெட்ரோ ரயில்கள் நாளை அதிகாலை 3 மணிமுதல் இயக்கம்
Updated on
1 min read

சென்னை: மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு நாளை சிறப்பு மெட்ரோ ரயில்கள் அதிகாலை 3 மணிமுதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாரத்தான் ஓட்டம் நாளை (5-ம் தேதி) நடைபெறுகிறது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில், மெட்ரோ ரயில் சேவை நாளை அதிகாலை 3 மணிமுதல் 5 மணிவரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதன் பிறகு, ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும்.

மாரத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் ‘க்யூஆர்’ குறியீடு பதியப்பட்ட சிறப்பு பயணச்சீட்டைப் பயன்படுத்தி நாளை மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்.

இதேபோல், வாகன நிறுத்துமிடத்தில் இந்த க்யூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி பங்கேற்பாளர்கள் அன்று மட்டும் தங்களுடைய வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in