சீல் வைக்கப்பட்ட ராமேசுவரத்தில் உள்ள லெட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறை.
சீல் வைக்கப்பட்ட ராமேசுவரத்தில் உள்ள லெட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறை.

ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை அருகே உடை மாற்றும் அறைக்கு சீல்

Published on

ராமேசுவரம்: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்த விவகாரத்தில் போலீஸார் இரண்டு பேரை கைது செய்திருந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி செவ்வாய்க்கிழமை சீலிடப்பட்டது.

ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கைரையில் நீராடிய பக்தர் ஒருவர், கடற்கரைக்கு எதிரே இருந்த லட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையில் உடை மாற்றச் சென்றுள்ளார். அங்கு அறையின் மறைவான இடத்தில் சிறிய அளவில் ரகசிய கேமரா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், இது குறித்து ராமேசுவரம் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் அந்த தனியார் உடை மாற்றும் அறையை ஆய்வு செய்து, அங்கிருந்த ரகசிய கேமராவை பறிமுதுல் செய்து, லட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையை நடத்தி வந்த ராஜேஷ் கண்ணன் மற்றும் அங்கு டீ மாஸ்டராக பணிபுரிந்த மீரான், மைதீன் ஆகிய இருவரை போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி, செவ்வாய்க்கிழமை கிராம நிர்வாக அலுவலர் ரொட்ரிகோ முன்னிலையில் ராமேசுவரம் கோயில் போலீஸார் லட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையை பூட்டி சீல் வைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in