தவெக மாநாட்டுக்கு சென்று மாயமானவர் குறித்து விசாரணை: ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தவெக மாநாட்டுக்கு சென்றவர் மாயமானது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த புஷ்பநாதன் என்பவர் தாக்கல் செய்தத ஆட்கொணர்வு மனுவில், “கடந்த அக்.27-ம் தேதி அன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு சென்ற எனது மகன் மேகநாதன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. மாயமான எனது மகனை கண்டுபிடித்து கொடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்,” என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், “மாயமான மனுதாரரின் மகனை சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” எனக்கூறி நிலை அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in