“அம்பேத்கரின் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்” - முதல்வர் ஸ்டாலின்

“அம்பேத்கரின் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்” - முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: “கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி, தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை சமைத்தவர் அம்பேத்கர். அண்ணலின் அறிவொளியில் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் அம்பேத்கர் நினைவு தினம் இன்று (டிச.6) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பெரும்பாலான மக்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும் மறுத்த, இந்தச் சமுதாயத்தில் வேரூன்றிய சமூக அநீதிகளுக்கு எதிராக நம்மிலிருந்து உருவாகி எதிர்த்த புரட்சியாளர் அம்பேத்கருக்குப் புரட்சி வணக்கம்.

கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி, தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை சமைத்தவர் அவர். தனது சிந்தனைகளால் நமக்கு உரமூட்டி, நம்மைப் பாதுகாக்கும் அம்பேத்கர் நம்முடைய வாளாகவும் கேடயமாகவும் என்றென்றும் வாழ்கிறார். அண்ணலின் அறிவொளியில் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in