விழுப்புரம், உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

இடம்: விழுப்புரம் | படம்: சாம்ராஜ்
இடம்: விழுப்புரம் | படம்: சாம்ராஜ்
Updated on
1 min read

சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிச.10-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிச.10ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில்கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிச.10-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in