புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் இருவர் உயிரிழப்பு: அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் இருவர் உயிரிழப்பு: அமைச்சர் நமச்சிவாயம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். மேலும், விரைவில் மின்விநியோகம் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் புயலின் தாக்கத்தினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வில்லியனூர், மண்ணாடிப்பட்டு, ரெயின்போ நகர் மற்றும் கிருஷ்ணா நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பின்பு உள்துறை அமைச்சர்நமச்சிவாயம் கூறுகையில், “மேட்டுப்பாளையம் மற்றும் சங்கரதாஸ் சுவாமிகள் நகர் ஆகிய இடங்களில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை மழைநீர் வடிகால்களில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டன. இறந்தவர்களின் அடையாளத்தை கண்டறியும் பணி நடந்து வருகிறது.

பழுதடைந்த மின் பகிர்மான வலையமைப்பை சரிசெய்து, வீடுகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்கும் பணியில் மின்துறை ஈடுபட்டுள்ளது. சொத்து மற்றும் பயிர் சேதத்தை அரசு மதிப்பிடும். மழை குறைந்த பிறகுதான் மதிப்பீட்டு செயல்முறை தொடங்கும்.” என்று அவர் கூறினார்.

மின் விநியோகம் தருவது பற்றி துணை நிலைய ஆளுநர் கைலாச நாதனிடம் மின்துறை சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டதை குறித்து அமைச்சர் விளக்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in