“டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திமுக அரசு அனுமதி கேட்டதை ஸ்டாலின் மறைத்தது ஏன்?” - இபிஎஸ்

“டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திமுக அரசு அனுமதி கேட்டதை ஸ்டாலின் மறைத்தது ஏன்?” - இபிஎஸ்
Updated on
1 min read

சென்னை: “டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டதே திமுக அரசு தான் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைத்தது ஏன்?” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்த 2023 அக்டோபர் மாதம் திமுக அரசுதான் அனுமதி கேட்டதாக நாளிதழ் மற்றும் வலைதள செய்திகள் தெரிவிகின்றன. அனுமதியை ரத்து செய்யக் கோரி கடிதம் எழுதிய "பேனா வீரர்" மு.க.ஸ்டாலின், அனுமதி கேட்டதே தனது அரசுதான் என்பதை மறைத்தது ஏன்?

நீட் தேர்வைக் கொண்டுவந்துவிட்டு அதை எதிர்ப்பது போல் நாடகமாடும் திமுக, அதே பார்முலாவை பயன்படுத்தி மேலூர் மக்களை ஏமாற்றுகிறது. திமுக அரசு மக்களைச் சுரண்டி சுரங்கம் அமைத்து , மக்களின் வாழ்விடத்தைப் பறிக்க திரைமறைவில் முயற்சி எடுத்து விட்டு, தற்போது செய்யும் இந்த கடித கபடநாடக ஏமாற்றுவேலைக்கு, மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in