நடிகை கஸ்தூரியை தேடும் மதுரை போலீஸ் - முன்ஜாமீன் மனு தள்ளுபடியால் தீவிரம்

நடிகை கஸ்தூரி | கோப்புப்படம்
நடிகை கஸ்தூரி | கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை: முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரியை மதுரை திருநகர் போலீஸார் தேடி வருகின்றனர். தமிழக நாயுடு மகாஜன சங்க பொதுச் செயலாளர் சுருதி ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், தமிழகத்தில் பாகுபாடின்றி அனைவரும் சமமாக ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். கடந்த 3-ம் தேதி நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும், நாயுடு குல சமுதாய பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசினார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இவர்களைத் தொடர்ந்து நாயுடு மகாஜன சங்க உறுப்பினர் சன்னாசி என்பவரும், மதுரை திருநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘நடிகை கஸ்தூரி ஒரு யூடியூப் சேனல் காணொலியில் நாயுடு சமுகத்தை பற்றியும், நாயுடு சமுதாய பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிட்டிருந்தார். இப்புகார்களின் அடிப்பைடையில், நடிகை கஸ்தூரி மீது 6 பிரிவுகளின் கீழ் திருநகர் காவல் ஆய்வாளர் துரைபாண்டி வழக்கு பதிவு செய்தார்.

இந்நிலையில், மதுரை திருநகர் போலீஸார் என் மீது தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கஸ்தூரி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இம்மனுவை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, திருநகர் போலீஸார் அடங்கிய தனிப்படையினர் கஸ்தூரியை தேடி வருகின்றனர். சென்னை பகுதிக்கும் தனிப்படை ஒன்று விரைந்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in