ராஜஸ்தானில் உயிரிழந்த ராணுவ வீரர் முத்துவின் உடலுக்கு அரசு மரியாதை

ராஜஸ்தானில் உயிரிழந்த ராணுவ வீரர் முத்துவின் உடலுக்கு அரசு மரியாதை
Updated on
1 min read

மதுரை: ராஜஸ்தான் மாநிலத்தில் பணியின் போது, விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

தேனி அல்லி நகரத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் முத்து (38). இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 10-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பகுதியில் நடந்த ராணுவ பயிற்சியின்போது, எதிர்பாராத விதமாக வாகன விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் ராணுவ வீரர் முத்துவின் உடலை சொந்த ஊரான தேனி மாவட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் உடல் மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

விமான நிலையத்தில் ராணுவ வீரர் முத்துவின் உடலுக்கு, கர்னல் ராஜீவன், மதுரை திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், அவனியாபுரம் உதவி காவல் ஆணையர் சீதாராமன், திருப்பரங்குன்றம் தாசில்தார் கவிதா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதன்பின் ஆம்புலன்ஸ் மூலம் முத்துவின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in