விஜயகாந்த் படப் பாடல் பாடிய சிறுமிகள் - கண்ணீர் விட்டு அழுத பிரேமலதா!

விஜயகாந்த் படப் பாடல் பாடிய சிறுமிகள் - கண்ணீர் விட்டு அழுத பிரேமலதா!
Updated on
1 min read

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ஓட்டலில் தங்கியிருந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா முன்பு சிறுமிகள், விஜயகாந்த் படப் பாடலை பாடியபோது, பிரேமலதா கண்ணீர் விட்டு அழுத காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

மதுரை தேமுதிக நிர்வாகி அழகர்சாமியின் மகன் திருமண விழா 4-ம் தேதி அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மதுரையில் நடந்தது. இத்திருமணத்தை முடித்துவிட்டு திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன், கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் தங்கி இருந்தனர். இவர்களை கட்சி நிர்வாகிகள் குடும்பத்துடன் வந்து நேரில் சந்தித்து, குழுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

மதுரை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், தனது மனைவி மற்றும் 3 மகள்களுடன் பிரேமலதாவை சந்தித்து புகைப்படம் எடுத்தார். அப்போது, அவரது 3 மகள்களும் கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘என் ஆசை மச்சான்’ படத்தில் இடம் பெற்ற “ஆடியில சேதி சொல்லி ஆவணியில், தேதி வச்சு சேதி சொன்ன மன்னவரு மன்னவரு தான்… எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்” என்ற பாடலை பாடினர். இந்தப் பாடலை கேட்ட பிரேமலதா, கண்ணீர் விட்டு அழுதபடி ரசித்து, பிறகு 3 சிறுமிகளை கட்டி அணைத்து முத்தமிட்டு பாராட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in