ஊர் சென்று திரும்புவோர் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கம்

ஊர் சென்று திரும்புவோர் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கம்
Updated on
1 min read

சென்னை: தீபாவளிக்கு ஊர் சென்று சென்னை திரும்புவோரின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக இன்று (நவ.4) பயணிகளின் நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 478 பேருந்துகளின் 3,529 பயண நடைகளுடன் கூடுதலாக 250 பேருந்துகளின் மூலம் 1,113 பயண நடைகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.

மேலும், தாம்பரம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், பூந்தமல்லி, கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையின் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பேருந்து இயக்கத்தை கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in