மேட்டூர் தண்ணீர் திறப்பு 500 கனஅடியாக குறைப்பு

மேட்டூர் தண்ணீர் திறப்பு 500 கனஅடியாக குறைப்பு
Updated on
1 min read

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு கடந்த 12-ம் தேதி விநாடிக்கு 4,938 கனஅடியாகவும், 13-ம் தேதி 6,445 கன அடியாகவும், நேற்றுமுன்தினம் 17,596 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து நேற்று 15,531 கனஅடியாக சரிந்தது.

மழை காரணமாக காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. எனவே, நேற்று முன்தினம் இரவு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 3,000 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. அதேபோல, கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கான நீர் திறப்பு 500 கனஅடியில் இருந்து 300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

நீர் திறப்பைவிட தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால், அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.92 அடியில் இருந்து 90.87 அடியாகவும், நீர் இருப்பு 52.55 டிஎம்சியில் இருந்து 53.65 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in