அரசு தேர்வுகள் 2025: டிஎன்பிஎஸ்சி வருடாந்திர கால அட்டவணை வெளியீடு

அரசு தேர்வுகள் 2025: டிஎன்பிஎஸ்சி வருடாந்திர கால அட்டவணை வெளியீடு
Updated on
1 min read

சென்னை: 2025-க்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இன்று (அக்.10) வெளியிட்டுள்ளது. அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) விவரம் இடம்பெற்றுள்ளது.

ஓராண்டில் எந்தெந்த பதவிகளுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும் என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், அடுத்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இன்று (அக்.10) வெளியிட்டுள்ளது.

இதில் குருப்-1 தேர்வு, குருப்-4, தேர்வு ஒருங்கிணைந்த குருப்-2 மற்றும் 2-ஏ தேர்வு, ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வு உள்பட மொத்தம் 7 தேர்வுகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும், எப்போது தேர்வு நடத்தப்படும் என்ற விவரங்களை தேர்வர்களே அறிந்துகொள்ளலாம். காலியிடங்களின் விவரம் தேர்வுக்கான அறிவிப்பின்போது தெரிவிக்கப்படும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in