ஹெச்.ராஜா அக்.17 வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: பாஜக அறிவிப்பு

ஹெச்.ராஜா அக்.17 வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: பாஜக அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்ய உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை அலுவலக செயலாளர் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜாவின் சுற்றுப்பயண விவரம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்திட, கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். சுற்றுப்பயணம் இனிதே நடந்திட அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

கட்சியின் 65 மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஹெச்.ராஜா, செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தில் தனது பயணத்தை இன்று (செப்.24) தொடங்குகிறார். வரும் 25-ம் தேதி தென் சென்னையிலும், 26-ம் தேதி காஞ்சிபுரத்திலும், 27-ம் தேதி வட சென்னையிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஹெச்.ராஜா, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களுக்கும் செல்ல உள்ளார். அடுத்த மாதம் 17-ம் தேதி நீலகிரியில் அவரது சுற்றுப் பயணம் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in