Published : 21 Sep 2024 05:20 AM
Last Updated : 21 Sep 2024 05:20 AM
சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில், மேம்படுத்தப்பட்ட பார்க்கிங் பகுதி திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் தினசரி 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர். பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்து வருகிறது. இதுதவிர, பயணிகள் அதிகரித்து வரும் மெட்ரோ ரயில்நிலையங்களில் பார்க்கிங் பகுதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் பகுதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்லியா (இயக்கம் மற்றும் பராமரிப்பு), கூடுதல் பொது மேலாளர் எஸ். சதீஷ் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
300 இருசக்கர வாகனம்: இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே எம்.ஜி.ஆர் சிலைக்கு பின்புறம், நிலையத்தின் மறுபுறம் அமைந்துள்ள இடத்தில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட வாகனநிறுத்துமிடம் பேவர் பிளாக்குகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு கூடுதலாக 300 இரு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்.தற்போது, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகனநிறுத்துமிடத்தில் 1,300 இருசக்கரவாகனங்களும், 180 நான்கு சக்கரவாகனங்களும் நிறுத்த முடியும்.இந்த கூடுதல் இடம் பயணிகளுக்குஅதிக வசதியை வழங்கும். மேலும்அதிகமான பயணிகள் மெட்ரோரயில் சேவைகளை எளிதாக பயன்படுத்த ஊக்குவிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT