“சமூக விடுதலைக்காக போராடிய தியாகி இமானுவேல் சேகரனார்” - முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

“சமூக விடுதலைக்காக போராடிய தியாகி இமானுவேல் சேகரனார்” - முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
Updated on
1 min read

சென்னை: இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தீண்டாமையை ஒழிக்கவும் – சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களது நினைவு நாள் இன்று. நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம். சமத்துவமும் – சமூகநல்லிணக்கமும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும்” என தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு நாள் நாளை (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து பரமக்குடி சந்தைபேட்டை பின்புறம் அமைந்துள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் மரியாதை செலுத்தினர். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து தனது எக்ஸ் தள பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இமானுவேல் சேகரனுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in