புதுச்சேரியில் செப்.17-ல் மிலாடி நபி பொது விடுமுறை: அரசு அறிவிப்பு

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

புதுச்சேரி: மிலாடி நபியை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் வரும் 17 ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்துள்ளது புதுச்சேரி அரசு.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. இதில் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி காரைக்கால் மற்றும் ஏனாமில் வரும் 17 ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்பட உள்ளது. அதே நேரத்தில் மாஹே பிராந்தியத்தில் வரும் 16 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் 17 ஆம் தேதியும் மாஹே பிராந்தியத்தில் வரும் 16 ஆம் தேதியும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுச்சேரி அரசின் உள்துறை சார்பு செயலாளர் ஹிரன் திறப்பித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in