ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவில் கரையை கடந்தது: தமிழகத்தில் 6 நாட்கள் மழை வாய்ப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவில் கரையை கடந்தது: தமிழகத்தில் 6 நாட்கள் மழை வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஒடிசா மாநிலம் புரி அருகே நேற்று மதியம் கரையை கடந்தது.

இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (செப்.10) முதல் 15-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in