தமிழகத்தில் செப். 1 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் செப். 1 வரை மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசை காற்றில் வேக மாறுபாடுநிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானமழை பெய்யக்கூடும். 28 முதல்செப். 1-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன்நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செமீ, தேவாலா,வூட் பிரையர் எஸ்டேட் ஆகியஇடங்களில் தலா 3 செமீ, கூடலூர் சந்தை, கூடலூர், கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணை,கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரம் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in