மாதவிடாய் கால விடுப்பு அளிப்பதை ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட குழு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மாதவிடாய் கால விடுப்பு அளிப்பதை ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட குழு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
Updated on
1 min read

மதுரை: மாத​வி​டாய் காலத்​தில் முழு ஊதி​யத்​துடன் கூடிய விடுப்பு வழங்​கு​வதற்​கான வாய்ப்​பு​களை ஆய்வு செய்ய 13 பெண்​கள் கொண்ட குழு அமைக்​கப்​பட்​டிருப்​ப​தாக உயர் நீதி​மன்​றத்​தில் அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

மதுரை கோம​திபுரத்​தைச் சேர்ந்த நர்​ம​தா, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்​தில் தனி​யார் நிறு​வனங்களில் பணி​யாற்​றும் பெண் பணி​யாளர்​கள் பலர், கடுமை​யான மாத​வி​டாய் வலியை சமாளித்​த​படியே பணி​யாற்ற வேண்​டிய நிலை உள்​ளது.

அவர்​களுக்கு மாத​வி​டாய் கால விடுப்பு வழங்​கும் சாத்​தி​யக் கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவி​லான குழுவை அமைக்​க​வும், முழு​மை​யான ஊதி​யத்​துடன் கூடிய விடுப்பு வழங்​கு​வது குறித்த கொள்​கையை அரசு உரு​வாக்​க​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் குறிப்​பிட்​டிருந்​தார்.

இந்த மனுவை நீதிப​தி​கள் சி.வி. கார்த்​தி​கேயன், ஆர்​.சக்​திவேல் அமர்வு விசா​ரித்​தது.அரசு தரப்​பில், ‘பெண்​களுக்கு மாத​வி​டாய் காலத்​தில் ஊதி​யத்​துடன் கூடிய விடுப்பு வழங்​கு​வது தொடர்​பாக முடி​வெடுக்க 13 பெண் உறுப்​பினர்​களை கொண்ட குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. அந்த குழு அறிக்கை தாக்​கல் செய்ய 3 மாதங்​கள் அவகாசம் தேவை’ எனக் கூறப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி​கள், மிக​வும் முக்​கிய​மாக கவனிக்​கப்பட வேண்​டிய ஒரு விஷ​யத்தை இந்த நீதி​மன்​றத்​தின் கவனத்​துக்கு கொண்டு வந்த மனு​தா​ரருக்கு பாராட்​டு​களை தெரிவிக்​கிறோம். இவ்​வழக்கு 2027 ஜன.21-க்கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது. அன்று மாநில அரசு அமைத்​துள்ள குழு அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்​தரவிட்​டனர்.

மாதவிடாய் கால விடுப்பு அளிப்பதை ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட குழு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
“அமெரிக்காவுக்கு ஒருபோதும் பணியமாட்டோம்” - ட்ரம்புக்கு ஈரான் அதிபர் பதிலடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in