

சென்னை: தமிழக காவல்துறையில் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக 33 காவல்துணைக் கண்காணிப்பாளர் களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம்செய்து தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால்நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
குறிப்பாக தருமபுரி மாவட்டம்பாலக்கோடு டிஎஸ்பி சிந்து, திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், கோயம்புத்தூர் மாவட்ட பொது விநியோக பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுடிஎஸ்பி ஜனனி பிரியா, காத்திருப்போர் பட்டியலுக்கும், அரியலூர்மாவட்ட குற்ற ஆவண காப்பகபிரிவு டிஎஸ்பி தமிழ்மாறன், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக் கும், திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி சோமசுந்தரம், தஞ்சாவூர் நகரத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.