Published : 09 Aug 2024 04:45 AM
Last Updated : 09 Aug 2024 04:45 AM

சிந்தாதிரிப்பேட்டை - கடற்கரை இடையேயான ரயில் சேவை மேலும் தாமதமாகும்

சென்னை: சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே தற்போது இரண்டு பாதைகளில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும்சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை இருக்கிறது.

எனவே, சென்னை எழும்பூர் -கடற்கரை வரை 4-வது பாதை அமைக்க நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரூ.274.20 கோடி மதிப்பில் புதிய பாதைக்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கின.

தற்போது பல்வேறு இடங்களில்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த பணி மேற்கொள்ள, சிந்தாதிரிப்பேட்டை -கடற்கரை இடையே ஆர்பிஐ அலுவலகம் (ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா) அருகே கடற்படைக்கு சொந்தமான இடத்தில் 110 மீட்டர்நிலம் ரயில்வே சார்பில் கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு அவர்கள் ஒப்புதல் அளித்திருந்தார்கள். அதற்கு பதிலாக மாற்று இடம் கடற்படைக்கு வழங்கவும் உடன்படிக்கை ஏற்பட்டிருந்தது. அதன்படி, ரயில்வேயால் கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு ஈடாக கடற்படையிடம் இடம் ஒப்படைக்கப்பட்டது.

கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டபோதிலும், பணியைத் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. மற்ற இடங்களில் பணிகள் முடிந்துவரும்நிலையில், இங்கு பணிகளை மேற்கொள்ள ரயில்வே அமைச்சகத்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இங்கு பணிகளை தொடங்க அனுமதி கிடைத்துவிட்டால், அடுத்த ஒரு மாதத்தில் சிந்தாதிரிப்பேட்டை -கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை தொடங்கிவிடும். இத்திட்டத்தை விரைவில் முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x