விழுப்புரம் அருகே கள்ளச் சாராயம் குடித்த ஒருவர் உயிரிழப்பு: 2 பேருக்கு தீவிர சிகிச்சை

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த ஜெயராமன்
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த ஜெயராமன்
Updated on
1 min read

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்த ஒருவர் உயிரிழந்தார். இருவருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை குடித்த உள்ளூரைச் சேர்ந்த 65 ஜெயராமன் (65) மற்றும் 2 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஜெயராமன் இன்று (ஜூலை 4) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் காலை 10 மணிக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி, மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக கள்ளச் சாராய ஒழிப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில், கள்ளச் சாராயம் குடித்து மேலும் ஒருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in